×

பீகார் பேரவை தேர்தலில் போட்டியிட்ட சகோதரர்களை ஆதரிக்காத மிசா பாரதி, சோனாக்‌ஷி ; காங்கிரஸ், ஆர்ஜேடி தொண்டர்கள் வருத்தம்

பாட்னா, :பீகார் பேரவை தேர்தலில் போட்டியிட்ட தேஜஸ்வி, தேஜ் பிரதாப்பின் சகோதரி மிசா பாரதியும், லூவ் சின்ஹாவின் சகோதரி சோனாக்‌ஷியும் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இதனால், காங்கிரஸ், ஆர்ஜேடி தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் முடிந்து இன்று மூன்றாம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளதால், அவரது இளைய மகன் தேஜஸ்வி கட்சியை வழிநடத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்பும் பிரசாரம் செய்தார். ஆனால், லாலு யாதவின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவியும், இவரது மகளுமான மிசா பாரதியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இருப்பினும், கட்சியின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருவரது பெயர்களும் சேர்க்கப்பட்டு இருந்தது.

பாஜக கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தில் குடும்ப ஆட்சி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அதனால் ரப்ரி தேவி மற்றும் மிசா பாரதி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருந்தால், ‘மீண்டும் குடும்ப ஆட்சி’ என்று பிரசாரம் மக்கள் முன்பு வைக்கப்படும் என்பதால், தேஜஷ்வி மட்டுமே தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மேலும், லாலு, ரப்ரி தேவி, மிசா பாரதி ஆகியோரின் புகைப்படத்தையும் போஸ்டரிலிருந்து அகற்றினார். இது கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோல், பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மண்ணின் மைந்தனான பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா ​மகன் லூவ் சின்ஹா போட்டியிட்டார். இவருக்கு கட்சியிலும், தொகுதியிலும் சொந்தமாக பலம் இல்லை என்றாலும் கூட தனது தந்தையின் செல்வாக்கில் பிரசாரம் மேற்கொண்டார். சத்ருகன் சின்ஹாவின் மகளும், வேட்பாளர் லூவ் சின்ஹாவின் சகோதரியுமான சோனாக்ஷி சின்ஹா ​​தனது சகோதரனுக்காக தேர்தல் பிரசாரம் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவரும் பிரசாரத்திற்காக வரவில்லை. ஆனால், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி  கட்சி சார்பில் போட்டியிட்ட அவரது தாயார் பூனம் சின்ஹாவுக்காக லக்னோவில் நடந்த பல பேரணிகளில் சோனாக்ஷி சின்ஹா ​​கலந்து கொண்டார். ஆனால், இப்போது சகோதரனுக்காக பிரசாரம் மேற்கொள்ளாமல் விலகி இருந்தது பீகார் மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Misa Bharathi ,brothers ,Sonakshi ,volunteers ,Bihar Assembly ,RJD ,elections ,Congress , Bihar, Misa Bharathi, Sonakshi, Congress, RJD
× RELATED சங்ககிரி அருகே கழுகை விரட்ட...