×

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவுக்கு தாவிய நடிகைக்கு எம்எல்சி பதவி : பாஜவில் இருந்து என்சிபிக்கு சென்றவருக்கும் அதிர்ஷ்டம்

மும்பை, :மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சிவசேனாவுக்கு தாவிய நடிகைக்கு எம்எல்சி பதவி கிடைக்கவுள்ளது. அதேபோல், பாஜவில் இருந்து என்சிபிக்கு தாவியவருக்கும் எம்எல்சி பதவி வழங்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். மாநிலத்தில் 12 சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான (எம்எல்சி) நியமன தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து  ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி சார்பில் 12 நியமன வேட்பாளர்களின் பெயர் பட்டியல் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் ஆளுநரின் ஒதுக்கீட்டின் மூலம் சட்டப்பேரவைக்கு அனுப்பப்படுவர்.

மேற்கண்ட மூன்று கட்சிகளும் தலா 4 வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளன. அதன்படி தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) சார்பில் ஏக்நாத் காட்ஸே, ராஜு ஷெட்டி, யஷ்பால் பிங்கே மற்றும் ஆனந்த் ஷிண்டே ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ரஜினி பாட்டீல், சச்சின் சாவந்த், முசாபர் உசேன் மற்றும் அனிருத் வான்கர் ஆகியோரும், சிவசேனா சார்பில் நடிகை ஊர்மிளா மாடோண்ட்கர், சந்திரகாந்த் ரகுவன்ஷி, விஜய் கரஞ்ச்கர் மற்றும் நிதின் பாங்குடே பாட்டீல் ஆகியோரின் பெயர்களும் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நடிகை ஊர்மிளா காங்கிரஸ் கட்சி சார்பில், மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். பின்னர், ஆளும் சிவசேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ‘ஜாகோல் 1988’ என்ற மராத்தி திரைப்படத்தில் தனது ஏழு வயதில் குழந்தை நட்சத்திரமாக ஊர்மிளா சினிமா கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சேகர் கபூரின் ‘மசூம்’ படத்தில் குழந்தை நடிகையாக நடித்தார். தொடர்ந்து தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது முழு நேர அரசியல்வாதியானதால் விரைவில் எம்எல்சியாக சட்டப் பேரவைக்குள் நுழைய உள்ளார். இதேபோல், பாஜகவை விட்டு வெளியேறி தேசியவாத காங்கிரசில் சேர்ந்த ஏக்நாத் காட்சும் எம்எல்சியாக தேர்வு ெசய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : MLC ,actress ,anyone ,Shiv Sena ,Congress ,BJP ,NCP , Congress, Shiv Sena, Actress, MLC
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கு; எம்எல்சி...