எனது மக்களின் உரிமைகள் திருப்பித் தரப்படும் வரை நான் சாக மாட்டேன் :தொண்டர்கள் முன் பரூக் அப்துல்லா பேச்சு

ஜம்மு, ‘எனது மக்களின் உரிமைகள் திருப்பித் தரப்படும் வரை நான் சாக மாட்டேன்’ என்று தொண்டர்கள் முன்பாக முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசினார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பின்னர், ஜம்முவில் தேசிய மாநாட்டு கட்சி (என்சி) தலைவர் பரூக் அப்துல்லா, தனது கட்சி தொண்டர்களிடம் நேற்று பேசுகையில், ‘எனது மக்களின் உரிமைகள் திருப்பித் தரப்படும் வரை நான் சாக மாட்டேன். மக்களுக்காக ஏதாவது செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். எனது வேலையை முடிக்கும் நாளில்தான் நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுவேன். ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர் ஒவ்வொன்றும் தனித்தனியாக இருப்பதாக நாங்கள்  ஒருபோதும் நினைத்ததில்லை. ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பினால், அவர்கள் 1947-ல் அவ்வாறு செய்திருப்பார்கள்.

அதை யாரும் தடுத்திருக்க முடியாது. ஆனால் நம் தேசம் மகாத்மா காந்தியின் இந்தியா. பாஜக-வின் இந்தியா அல்ல’’ என்றார். தொடர்ந்து பரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, ஷெர்-இ-காஷ்மீர் பவனுக்கு வந்தார். ஒரு ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக வந்தார். அவர் கூறுகையில், ‘பிரிவு 370, பிரிவு 35 ஏ-வை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரில் லகான்பூருக்கு அப்பால் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்புச் சட்டங்களை தூக்கி எறிவதற்கும் கட்சிகள் கைகோர்த்துள்ளன’ என்றார்.

Related Stories:

>