×

வரும் 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1,050 தியேட்டர்கள் திறக்கப்படும் : தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கம்

சென்னை,: தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏழு மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. வரும் பத்தாம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தியேட்டர்கள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்தது.

இந்நிலையில் தியேட்டர்களில் படங்கள் ஒளிபரப்பு வதற்கான விபிஎஃப் கட்டணத்தை திரைப்பட தயாரிப்பாளர்கள் செலுத்த மாட்டார்கள். அதை தியேட்டர் அதிபர்களே செலுத்த வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதை தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் ஏற்க மறுத்தனர். இந்த விவகாரத்தில் தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் திட்டமிட்டபடி வரும் 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 1,050 தியேட்டர்கள் திறக்கப்படும் என தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



Tags : theaters ,Tamil Nadu ,Tamil Nadu Theater Principals Association , Theaters, Tamil Nadu Theater Principals Association
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...