×

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் தரை இறங்கும் அனைத்து விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழ் மொழியில் இடம்பெற வாய்ப்பு :அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

டெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நேற்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் செயலாளரை டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களிலும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழில் இடம்பெற வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக இதுதொடர்பாக முதல்வர் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்புகள் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விமான நிறுவனங்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 மேலும் தமிழக அரசு தரப்பிலும் இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களிடம் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் தரை இறங்கும் அனைத்து விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழ் மொழியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அலுவல்மொழி சட்டத்தில் தமிழும் இடம் பெற வேண்டும் என மத்திய அலுவல் மொழி செயலாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் நடைமுறைக்கு வரும். இதைத்தவிர சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழில் வெளியிடுவதற்கான தடைகள் விரைவில் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : announcement ,festival ,Minister MP ,Pongal ,Chennai ,Pandiyarajan , Pongal Festival, Chennai, Tamil Language, Minister M.P.Pandiyarajan
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...