×

தேனியில் புதிய பஸ்நிலைய சாலைக்கு ‘வெளிச்சம்’: தினகரன் செய்தி எதிரொலியால் மின்விளக்குகள் சீரமைப்பு

தேனி: தினகரன் செய்தி எதிரொலியாக, தேனியில் புதிய பஸ்நிலைய சாலையில் உள்ள மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனியில் புதிய பஸ்நிலையம் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ளது. அரண்மனைப்புதூர் விலக்கிலிருந்து புதிய பஸ்நிலையம் வரக்கூடிய சாலையில் சுமார் 100 மீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் இருந்த மின்விளக்குகள் எரியாமல் இருந்தன. இதனால், இரவு நேரங்களில் பயணிகளிடம் வழிப்பறி நடக்கும் அபாயம் இருந்தது. இது குறித்து நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நகராட்சி நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டன. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருளில் மூழ்கும் பூங்கா பகுதி புது பஸ் நிலையத்துக்கு எதிரில் உள்ள பூங்கா பகுதி மின்விளக்குகளும் எரியாமல் கும்மிருட்டாக உள்ளது. எனவே, பஸ் நிலையத்தை சுற்றியுள்ள அனைத்து மின்விளக்குகளும் இரவு நேரங்களில் எரிவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : bus stand road ,Theni ,Dinakaran , 'Light' for new bus stand road in Theni
× RELATED தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ்...