அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு எனது கனிவான வாழ்த்துகள்.. கேரள முதல்வர் பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து!!

சென்னை : நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்  பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல்ஹாசன் தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசனுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு எனது கனிவான வாழ்த்துகள். அவருடைய பிறந்த நாள் மற்றும் இந்தாண்டு சிறப்பாக அமைய இருக்க வாழ்த்துகள்“ என்றுள்ளார்.

அதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முத்தமிழறிஞர் கலைஞரால் கலைஞானி என்று போற்றப்பட்ட - எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரிய நண்பர் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நலமுடன் நீண்ட காலம் வாழ்க! #HBDKamalHaasan, எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>