×

தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்வழி படிப்பு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து வழக்கு: பல்கலைக்கழகங்கள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தொலைநிலைக் கல்வியில் பட்டம் ெபற்றோருக்கு தமிழ் வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த வழக்கில், பல்கலைக்கழகங்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:சட்டப்படிப்பை தமிழ் வழியில் முடித்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு நடத்திய துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 குரூப் 1 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தேன்.

முதல்நிலை தேர்வு மற்றும் பிரதான எழுத்துத்தேர்வை முடித்து நேர்முகத்தேர்வில் பங்கேற்றேன். கடந்த டிச. 9ல் வெளியான தேர்வானோர் பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை.தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு எனக்கு வழங்கப்படவில்லை. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை தொலைநிலைக்கல்வியில் பயின்றோருக்கு கொடுத்துள்ளனர். தொலைநிலைக்கல்வியில் சில பாடங்கள் ஆங்கிலத்திலும், சில பாடங்கள் தமிழிலும் நடத்தப்படுகிறது. ெதாலைநிலைக் கல்வியில் பயின்ற பலர் டிஎன்பிஎஸ்சியில் இந்த ஒதுக்கீட்டின் மூலம் வேலை பெற்றுள்ளனர்.
எனவே, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இடஒதுக்கீட்டின் படி, தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கக்கூடாது என்றும்,

குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதித்தும், கல்லூரிக்கு சென்று முழு நேரமாக தமிழ் வழியில் பயின்றவர்களை, தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகே குரூப் 1 பணி நியமனங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், இந்த வழக்கில் தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்மனுதாரராக சேர்த்து, அவர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை
2 வாரம் தள்ளி வைத்தனர்.

Tags : graduates ,Tamil ,Universities , Case against reservation of Tamil medium course for graduates in distance education: Universities Order to respond
× RELATED அர்ஜெண்டினாவில்...