அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவுக்குகொலை மிரட்டல்: மர்மநபருக்கு போலீஸ் வலை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அண்ணாபல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சூரப்பா கடிதம் எழுதியதால் அவரை நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர், மாணவ அமைப்புகள் என அனைவரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக அரசும், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என பதில் அனுப்பியிருந்தது. இந்நிலையில் துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.

மேலும் அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீரப்பன் என்ற ெபயரில் கடிதம் வந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து, அந்த கடிதம் எங்கிருந்து வந்தது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதம் அனுப்பிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Related Stories:

>