×

ஐபிஎல் டி20-2020 எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி குவாலிபயர் 2 போட்டிக்கு முன்னேறியது..!

அபுதாபி: ஐபிஎல் 2020 எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி குவாலிபயர் 2 போட்டிக்கு முன்னேறியது. அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்களை குவித்தது. பெங்களூரு அணியில் டி வில்லியர்ஸ் 53 ரன்களையும் , பிஞ்ச் 32 ரன்களையும் எடுத்தனர். சன் ரைசர்ஸ் அணியில் ஹோல்டர் 3 விக்கெட்களையும் , நடராஜன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெறறது.


Tags : Sunrisers Hyderabad ,eliminator ,IPL ,Bangalore ,Qualifier , Sunrisers Hyderabad beat Bangalore in IPL T20-2020 eliminator to advance to Qualifier 2
× RELATED சேப்பாக்கம் மைதானம் அருகே...