×

விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு மாற்று திட்டம் ஏதுமில்லை: நம் மாநில வளர்ச்சிக்காக விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

திருப்பூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் , வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் , முடிந்த பணிகளை திறந்து வைத்தல் ,கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திருப்பூர் வருகை தந்தார். ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , வேளாண்மைதுறை , மகளிர் திட்டம் , கூட்டுறவுத்துறை , வருவாய்துறை உள்ளிட்ட 29 துறைகளில் , 5592 பயனாளிகளுக்கு 66 கோடியே 72 லட்சத்து , 75 ஆயிரத்து 822 ருபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குகினார். 31 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான முடிந்த வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும் ,287 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரம் ருபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்  வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் அம்மா தேர்தல் நேரத்தில் கூறியதுபோல மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாகவும் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு தார்மிக உரிமை இல்லை எனவும் ,

எங்கள் ஆட்சி நேரத்தில்தான் பேரறிவாளனுக்கு இரண்டுமுறை பரோல் வழங்கப்பட்டிருப்பதாகவும் ,  மனிதாபிமான அடிப்படையில் தற்போதும் 7 பேர் விடுதலைக்காக சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் உயர்மின் கோபுர விவகாரத்தில் நம் மாநிலத்திற்கு மின்சாரம் வழங்க பிற மாநில விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க முன் வந்துள்ள சூழ்நிலையில் நம் மாநில வளர்ச்சிக்காக நம் விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் , இதைத் தவிர்த்து மாற்று திட்டம் ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்,

மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளின் தண்ணீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் கேரள மாநில அரசின் அனுமதியோடு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில் பாண்டியாறு பொன்னம்புழா குறித்தும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாகவும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழ்நிலையில் தடையை மீறியதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



Tags : power tower ,farmland ,state , There is no alternative to the plan to build a high power tower through farmland: Farmers must cooperate for the development of our state
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...