×

ராஜஸ்தான், டெல்லி, ஒடிசாவை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கர்நாடக அரசு தடை

பெங்களூரு: ராஜஸ்தான், டெல்லி, ஒடிசாவை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. கொரோனா பரவல், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட காரணங்களை கூறி தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க பல்வேறு மாநிலங்கள் தடை விதித்து வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ள அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தடையை மீறினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் டெல்லி மற்றும் சிக்கிம் மாநிலங்களிலும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Tags : Karnataka ,Diwali ,Rajasthan ,Odisha ,Delhi , Deepavali, Fireworks, Bangalore
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...