×

பாஜக அரசின் இந்தி திணிப்பை முறியடிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ். குமாரதேவன் கேட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை இந்தியில் பதிலளித்துள்ளது. இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் என்று நாட்டின் முதல் பிரதமர் நேரு உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து 1967-ல் இந்தி பேசாத மக்கள் மீது இந்தி திணிக்க முடியாத வகையில் ஆட்சிமொழி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை பாஜக அரசு திணித்து வருகிறது. அதனால்தான் இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு இந்தியில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. ஒருபக்கம் பிரதமர் மோடி பாரதியாரின் கவிதைகள், திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார். மறுபக்கம் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த இரட்டை வேடத்தை தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டும்.

Tags : KS Alagiri ,parties ,dump ,government ,BJP , Tamil Nadu, Congress leader, KS Alagiri
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ