×

ஆன்லைன் சூதாட்டத்தடை பல குடும்பங்களை பாதுகாக்கும் ; நடுத்தெருவுக்கு வருவதைத் தடுக்கும் : ராமதாஸ் ட்வீட்

சென்னை :பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துபவர்கள்  குற்றவாளிகளாக கருதப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது!

ஆன்லைன் சூதாட்டத்தடை பல குடும்பங்களை பாதுகாக்கும் ; நடுத்தெருவுக்கு வருவதைத் தடுக்கும். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து  தற்கொலை செய்து கொண்ட ஏராளமான இளைஞர்களின் மரணத்திற்கு நீதி வழங்குவதாக அமையும்!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக  4 ஆண்டுகளுக்கும் மேலாக நான் குரல்  கொடுத்து வருகிறேன்.  ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அரசின் முடிவு  மனநிறைவளிக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Prevent ,families ,Ramadas ,street , Online, Gambling, Ramadan, Tweet
× RELATED பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை!:...