நாளை சி-49 ராக்கெட் விண்ணில் பயணம் : திருப்பதியில் ராக்கெட் மாதிரிகளை சுவாமி பாதத்தில் வைத்து இஸ்ரோ அதிகாரிகள் தரிசனம்

திருமலை, :பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ அதிகாரிகள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட், நாளை மாலை 3.02 மணிக்கு 1வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்காக இஸ்ரோ அதிகாரிகள் ராக்கெட் மாதிரிகளுடன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தனர். அங்கு ராக்கெட் மாதிரிகளை சுவாமி பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் பெற்றுச்சென்றனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Related Stories:

>