×

பகவான் ராமபிரானின் வாழ்க்கைப் பாடத்தை கற்று நல்வழியில் மக்கள் செல்ல வேண்டும் - குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள்

டெல்லி : அடுத்த தலைமுறையினர், பகவான் ராமரின் வாழ்க்கை  மற்றும் நற்குணங்களைக் கற்று, அவர் காட்டிய நல்வழியில் செல்ல வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.‘‘தவாஸ்மி: ராமாயணா பார்வையில் வாழ்க்கை மற்றும் திறமைகள்’’ என்ற தலைப்பிலான புத்தகத்தை காணொலிக் காட்சி மூலம் அவர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. வெங்கையா நாயுடு, ‘‘உண்மையும், நீதியும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதை ராம பிரானின் வாழ்க்கையும், பேச்சும், செயல்பாடுகளும் விவரிக்கின்றன. குடும்பத்தினர், ஆசிரியர்கள், எதிரிகளுடனான அவரது உறவு ஆகியவை வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை  எப்படி வலுவாக எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது’’ என்றார்.

பகவான் ராமரை `மர்யாதா புருசோத்தமா’ எனக் குறிப்பிட்ட  குடியரசு துணைத் தலைவர், அவர் சிறந்த ஆட்சியாளராக செயல்பட்டு மக்கள் மனதில் எப்போதும் இடம் பிடித்தார் என்றார். ராமாயணம் என்றும் அழியாத இதிகாசம் என குறிப்பிட்ட அவர், அது இந்தியாவின் ஒட்டுமொத்த கலாச்சாரப் பாரம்பரியத்தில் பொதிந்துள்ளது என்றார்.  ராமர் கூறியவற்றை, ஏராளமான புலவர்கள் மற்றும் முனிவர்கள் ராமாயணமாக பல மொழிகளில் எழுதியுள்ளனர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.  ‘‘உலகில் எந்த ஒரு இதிகாசமும் ராமாயணம் போல், மீண்டும், மீண்டும் பல வழிகளில் சுவாரசியமாக எழுதப்படவில்லை’’ என குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

வால்மீகி ராமாயணம், முதல் இதிகாசம் மட்டும் அல்ல, என்றும் மதிப்பிழக்காத காலவரையற்ற நிலையான இதிகாசம்  எனவும், அது படித்தவர்களையும், படிக்காதவர்களையும் கவரக்கூடியது எனவும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். நேர்மறையான சிந்தனைகளுடன், முழுமையான வாழ்க்கை வாழ, இளைஞர்களை ராமாயணம் ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார்.

‘‘தீமை, குறும்பு, வன்முறைக்கு எதிரான நேர்மையான வெற்றியை நாம் கொண்டாடுகிறோம்’’ என அவர் குறிப்பிட்டார்.ராவணனை வீழ்த்தியபின், ராமரை இலங்கையில் இருக்கும்படி, லட்சமணன் கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ராமர், ‘‘தாயும், தாய் நாடும் சொர்க்கத்தை விட மேலானவை’’ எனக் கூறியதாக திரு.வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.இந்த அறிவுரையை மக்கள் என்றும் கருத்தில் கொண்டு, வேலை தேடி வெளிநாடு சென்றாலும், தாய்நாட்டை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று திரு.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.

Tags : Ramaphran ,Venkaiah Naidu ,Vice , Lord Ramaphran, Venkaiah Naidu, Request
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...