×

தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவதாகவே தெரிகிறது : பாஜக வேல் யாத்திரை குறித்து ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

சென்னை : வருகின்ற சட்டமன்ற தேர்தலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் கட்சி குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

திமுக தலைவருடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்ததாவது...

கடந்த அக்டோபர் 31ம் தேதி நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து பணியாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வுடன் கூட்டணியில் இணைந்து சட்ட மன்ற தேர்தலை சந்திப்போம்.

வருகின்ற 26ம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் திட்டங்கள் , மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்கள் திரும்ப பெற  வலியுறுத்தி அகில இந்திய தொழிற் சங்க கூடங்கள் போராட்டங்கள் அறிவித்துள்ளன. இதற்கு திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் ஆதரவு கொடுக்க வேண்டும் என ஆலோசித்தோம். இது குறித்தும் பரிசீலிப்போம் என திமுக தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 7 பேர் விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். காலம் தாழ்த்துவது சரி இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே காலம் தாழ்தாமல்  விரைவில் முடிவெடுக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை அழுநரை கேட்டுக்கொள்கிறோம்.

தடையை மீறிய பாஜக யாத்திரை குறித்த கேள்விக்கு?

தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் பாஜக யாத்திரை நடத்தி இருப்பது சரி அல்ல.தடையை மீறி யாத்திரை செல்வது, தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவதாகவே தெரிகிறது இது கண்டிக்கதக்கது.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.


Tags : land ,pilgrimage ,BJP ,Tamil Nadu ,Vail ,G. Ramakrishnan , Vail Pilgrimage, G. Ramakrishnan, Comment, BJP
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!