×

வெற்றிவேல்.. வீரவேல்....முழங்கியபடி பாஜகவினர் திருத்தணி நோக்கி பயணம்.. தமிழகத்தில் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என எல்.முருகன் உறுதி

சென்னை : சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் எல்.முருகனுடன் 6 வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதி வழங்கியுள்னர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. கொரோனாவை காரணம் காட்டி யாத்திரைக்கு அரசு தடை விதித்திருப்பினும், தடை மீறி யாத்திரையை நடத்த பாஜக முடிவெடுத்தது.அதன் படி, திருத்தணியில் தொடங்க உள்ள யாத்திரையில் பங்கேற்க எல்.முருகன் கையில் வேலுடன் இன்று காலை புறப்பட்டு சென்றார். அவருடன் வி.பி.துரைசாமி, கருநகராஜன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் செல்கின்றனர்.

கோயம்பேடு, மதுரவாயல், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி வழியாக வந்த வெற்றிவேல் யாத்திரை, பூந்தமல்லி – திருமழிசை கூட்டு சாலையில் திரும்பும்போது கைது செய்வதற்காக 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இரும்பு தடுப்புகள் அமைத்து இருந்தனர். ஆனால் வேல் யாத்திரை பிரசார வாகனத்துடன் 6 வாகனம் உடன் செல்ல போலீஸ் திடீரென அனுமதி அளித்துள்ளது. பாஜகவினர் அந்த தடுப்புகளை மீறி வெற்றிவேல் கோஷமிட்டபடி அங்கிருந்து சென்றனர்.

இதில் வெற்றிவேல் யாத்திரைக்கு பாஜக தலைவர் முருகனோடு சேர்த்து 6 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதனை பின்தொடர்ந்து வந்த பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. . இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து போலீசாரின் தடுப்புக் காவலை மீறி பாஜக யாத்திரை ஆனது சென்று கொண்டிருக்கிறது. தான் சாமி கும்பிடுவதற்கு மட்டுமே செல்வதாக கூறி பாஜக தலைவர் முருகனை போலீசார் அனுமதித்தனர். திருத்தணியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு யாத்திரையை தொடங்கினால் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : BJP ,Vetrivel ,L. Murugan ,Thiruthani ,pilgrimage ,Tamil Nadu ,Vail , Victory, Pilgrimage, Government of Tamil Nadu, Prohibition, Opposition, BJP Vice President, VP Thuraisamy
× RELATED நீலகிரியில் வாழும் பழங்குடியின...