×

அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு தொற்று .. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 5 கோடியை நெருங்கியது...

ஜெனீவா: உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.90 கோடியாக உயர்ந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4,90,16,480 பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 1,27,97,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் நேற்று 1.08 லட்சம் பேருக்கும் இன்று 1.15 லட்சம் பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 9,919,522, உயிரிழப்பு - 240,953 , குணமடைந்தோர் - 6,340,472
இந்தியா       -    பாதிப்பு - 8,411,034, உயிரிழப்பு -  125,029 , குணமடைந்தோர் -7,764,763
பிரேசில்       -    பாதிப்பு -5,614,258, உயிரிழப்பு -  161,779 , குணமடைந்தோர் - 5,064,344
ரஷியா        -    பாதிப்பு - 1,712,858, உயிரிழப்பு -   29,509 , குணமடைந்தோர்  - 1,279,169
பிரான்ஸ்     -     பாதிப்பு - 1,601,367, உயிரிழப்பு -   39,037 , குணமடைந்தோர்  -  124,278

Tags : outbreak ,Corona ,United States ,victims , .World, corona, vulnerability
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்