×

மத்திய அரசை கண்டித்துவிவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. நாடு முழுவதும் விவசாயிகளை பாதிக்கும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்,  வேளாண் விளை பொருட்கள் விற்பனை  சட்டம்,   விலை உத்தரவாதம், பண்ணை ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம், மின்சார திருத்த சட்டம் ஆகிய சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு துணை போகும் அதிமுக அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இதையொட்டி, செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் அருகில், சங்க மாவட்ட தலைவர் ஜி.மோகனன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் பி.சண்முகம், விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் முருகேசன், மதுராந்தகம் வட்ட செயலாளர் எஸ்.ராஜா, பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி எஸ்.ரவி, செங்கல்பட்டு பகுதி மார்க்சிஸ்ட் செயலாளர் கே.வேலன், திருக்கழுக்குன்றம் வட்ட செயலாளர் எம்.குமார், தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி கவுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், காஞ்சிபுரம் கலெக்டர் அலுலுவலகம் அருகில் மாவட்ட துணை தலைவர் சாரங்கன் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு,  நிர்வாகிகள் ஜீவா, லாரன்ஸ், லிங்கநாதன், தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் டில்லிபாய், சசிகலா, உஷாராணி, மக்கள் ௮திகாரம் நிர்வாகி திலகவதி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி து.முா்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,unions ,government , Demonstration by farmers' unions condemning the federal government
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...