×

இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர் வலைகளை வெட்டி கடலில் வீச்சு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர். சில படகுகளில் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். வேறு பகுதிக்கு  சென்றவர்களையும் மீன் பிடிக்க விடாமல் துரத்தி விரட்டியடித்தனர். வேறு வழியின்றி இரவிலேயே மீனவர்கள் கரை திரும்பினர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல்கள்  வேறு பகுதிக்கு சென்றதும், கடலில் மிதந்த தங்களது வலைகளை எடுத்துக்கொண்டு கரை திரும்பினர். படகுகளில் மிகவும் குறைந்த அளவே மீன்களே இருந்ததால், கடும் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.



Tags : Sri Lankan ,fisherman ,sea ,Rameswaram , Sri Lankan naval atrocity Rameswaram fisherman cuts nets and throws them into the sea
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!