×

இ.ஓ.எஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி- சி 49 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: இ.ஓ.எஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி சி49 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், ராக்கெட் ஏவும் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஓஎஸ்-01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ பி.எஸ்.எல்.வி -சி49 ராக்கெட் மூலம் நாளை மாலை 3 மணி 2 நிமிடத்தில் விண்ணில் செலுத்த உள்ளது.

இதனுடன் இணைந்து வணிக ரீதியாக 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன. இ.ஓ.எஸ்- 01 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளையும் துல்லியமாக மேற்கொள்ளும். கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்கள் ராக்கெட் ஏவுதலை பார்வையிட அனுமதிக்கப்படமாட்டார்கள். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : PSLV-C49 rocket launches tomorrow with EOS-01 Earth observation satellite
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...