×

டிரம்ப் பதவிக் காலம் முடியும் முன் மேலும் 1 லட்சம் பேர் இறப்பார்கள்: அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்: டிரம்ப் பதவி விலக 86 நாட்களே உள்ள நிலையில், கொரோனா பரவலால் மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு பலியாவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா தொற்றினால், உலகம் முழுவதும் தற்போது வரை 4,81,75,559 பேர் பாதித்துள்ளனர். இதுவரை 3,19,38,785 பேர் குணமடைந்தும், 12,26,444 பேர் உயிரிழந்தும் இருக்கின்றனர். இதில், அமெரிக்காவில் மட்டும் 94,88,276 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமானோர் எண்ணிக்கை 37,43,527 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 2,33,734 ஆகவும் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் கொரோனா பரவல் காரணமாக முன்கூட்டியே வாக்களித்தல், தபால் வாக்குப்பதிவு வசதியை பயன்படுத்தி ஏறக்குறைய 10 கோடி பேர் வாக்களித்தனர். கடந்த 3ம் தேதி நடந்த நேரடி வாக்குப்பதிவில் மேலும் 6 கோடி பேர் வாக்களித்தனர். மேலும், அதிபர் டிரம்ப், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பிடெனின் பிரசார கூட்டங்களில் பல ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். இந்த நேரடி வாக்குப்பதிவின் போதும்,  பிரசாரங்களின் போதும் மக்கள் கொரோனா வழிகாட்டுதல் முறைகளான சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை பின்பற்றவில்லை. இதனால், அதிபர் டிரம்பின் பதவிக் காலம் முடிவடைய உள்ள அடுத்த 86 நாட்களில், அதாவது 2021 ஜனவரி 20ம் தேதிக்குள், மேலும் ஒரு லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகக் கூடும் என நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் செயல்படும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ராபர்ட் மர்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், அமெரிக்காவில் கடந்த 2 வாரங்களாக, கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இங்கு 7 நாட்களில் பாதிக்கபடுவோரின் சராசரி எண்ணிக்கை 86,352 ஆக உள்ளது. அதே போல், நாள்தோறும் சராசரியாக 846 பேர் தொற்றுக்கு பலியாகும் நிலையில், இறப்பு எண்ணிக்கையும் 15 சதவீதம் உயர்ந்துள்ளது, என்று தெரிவித்தனர்.

சீனா நம்பிக்கை
அமெரிக்க அதிபர் தேர்தலில் இழுபறி ஏற்பட்டுள்ளது பற்றி சீனாவின் வெளியுறவு துறை துணை அமைச்சர் லீ யூசெங் கூறுகையில், “நான் உட்பட சீன மக்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக, அமெரிக்க தேர்தல் முடிவுகளை கவனித்து வருகிறார்கள். தேர்தல் நடைமுறைகள் சுமூகமாகவும், வெற்றிகரமாகவும் நடக்கும் என்று நம்புகிறோம். இருநாடுகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்த போதிலும், மீண்டும் ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன,” என்றார்.

கருத்து கூற முடியாது - ஐநா
ஐநா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், ‘இப்போதுள்ள கட்டத்தில் அமெரிக்க தேர்தல் பற்றி கருத்து கூற முடியாது. வாக்குகள் எண்ணிக்கை நடந்து வருவதை நாம் அனைவரும் மிகவும் வெளிப்படையாகவும், உற்றுநோக்கியும் வருகிறோம்’ என்றார்.

வாக்காளர் குழு’ என்பது என்ன?

அமெரிக்காவில் மக்கள் என்னதான் அதிகளவில் வாக்களித்தாலும், அதிபரை அவர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது. அவர்கள் வாக்களித்த பிறகு, ‘எலக்ட்ரால் காலேஜ்’ எனப்படும் ‘வாக்காளர் குழு’விடம் அந்த பொறுப்பு சென்று விடும். அதிபரை தேர்ந்தெடுப்பதுதான் இவர்கள் பணி. இந்த வாக்காளர் குழு வாக்களிப்பு நடைமுறை 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தகுதியற்ற ஒருவரை மக்கள் அதிபராக்கி விடக் கூடாது என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: n அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கும், அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு பிரதிநிதிகள் இருப்பார்கள்.

* தற்போது, மொத்தம் 538 வாக்காளர் குழு பிரதிநிதிகள் இருக்கிறார்கள்.
* இவர்களில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற முடியும். இதன்படிதான், தற்போது பிடென் 264 வாக்குகளும், டிரம்ப் 214 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
* ஒரு மாகாணத்தில் எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த வாக்காளர் குழு பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைக்கும்.
* உதாரணமாக, கலிபோர்னியா மாகாணத்தில் வெற்றி பெரும் வாக்காளருக்கு 99% வாக்குகள் கிடைத்தாலும் சரி அல்லது வெறும் 51% வாக்குகள் கிடைத்தாலும் சரி, அந்த மாகாணத்துக்கான மொத்த 55 வாக்காளர் குழு பிரதிநிதிகளின் வாக்குகளும் வெற்றியாளருக்கே போய் சேரும்.
* அதனால்தான், தேர்தலில் மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளர் கூட, இந்த வாக்காளர் குழு வாக்குகள் மூலம் அதிபராக முடிகிறது. கடந்த முறை நடந்த தேர்தலில் டிரம்ப் இப்படிதான் வெற்றி பெற்றார்.
*  2000 தேர்தலில்  ஜார்ஜ் புஷ்சும் மக்களின் வாக்குகளை குறைவாகதான் பெற்றார். ஆனால், வாக்காளர் குழு வாக்குகளை அதிகமாக பெற்று அதிபரானார்.

பல ஆண்டுகளாக மாற்ற முயற்சி
அதிபர் யார் என்பதை மக்களே தங்கள் வாக்குகள் மூலம் தீர்மானிக்க வேண்டும். வாக்காளர் குழு பிரதிநிதிகள் நடைமுறை தேவையில்லை என்ற கோஷம், அமெரிக்காவில் பல ஆண்டுகளாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதை ஒழிக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் நடக்கிறது. ஆனால், ‘அமெரிக்கா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், சிறந்த தேர்தல் முடிவுகளை பெறுவதற்கு இதுபோன்ற கிடிக்கிப்பிடி நடைமுறை தேவைதான்,’ என்ற கருத்தே அதிகமாக இருப்பதால், இதை மாற்ற முடியவில்லை.
* அமெரிக்காவில் வழக்கமாகவே, வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்களாகும். ஆனால், தேர்தல் முடிந்த மறுநாள் காலையில் வெற்றி பெறப் போவது யார் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும்.
* வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக, உச்ச நீதிமன்றத்தில் வேட்பாளர்கள் வழக்குப் போடுவது ஒவ்வொரு தேர்தலிலும் சாதாரணமாகவே நடக்கும். டிரம்ப் வெற்றி பெற்ற கடந்த தேர்தலிலும் இதுபோல் ஹிலாரி கிளிண்டன் வழக்கு தொடர்ந்தார்.

Tags : term ,experts ,Trump ,US , 1 lakh more to die before Trump's term ends: US medical experts warn Send feedback History Saved
× RELATED 1 முதல் 5ம் வகுப்பு வரை ‘எமிஸ்’...