×

ஒரே நாளில் 6,842 பேருக்கு கொரோனா; டெல்லியில் 3வது அலையா?

புதுடெல்லி: டெல்லியில் கொரோனாவின் தாண்டவம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நேற்று 6.842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது நாட்டின் 2வது அலையின் தாக்குதல் என்றும், டெல்லியில் 3வது அலை என்றும் முதல்வர் கெஜ்ரிவால் அச்சம் தெரிவித்துள்ளார். புது டெல்லியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் டெல்லியில் புதிதாக 6,725 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தி அடங்கும் முன்னர், நேற்று 6,842 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
‘நாடே கொரோனாவின் 2வது அலையை எதிர்பார்த்து அஞ்சிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், டெல்லியில் 3வது அலை என்றுதான் இதை கூற வேண்டும். மிகவும் கவலைக்கிடமாக தலைநகர் உள்ளது. நாளை இது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடத்துகிறோம்.

10 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை மற்றும் காற்று மாசு அதிகரித்துள்ளதும் கொரோனாவின் தாக்குதல் அதிகரிக்க காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ‘அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் சராசரியாக 6 ஆயிரம் பேர் என்பதால், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் போதவில்லை. தனியார் மருத்துவமனைகளில் 80 சதவீத படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு அளிக்க வேண்டும் என்று இன்று கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 50,554 பேருக்கு கொரோனா
நேற்று நாடு முழுவதும் 50,554 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 83 லட்சத்து 63 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக நேற்று கேரளாவில் 8,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று நாட்டில் கொரோனாவால் 713 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,Delhi ,wave , Corona for 6,842 people in a single day; 3rd wave in Delhi?
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...