×

தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்ததுபோல் முருகனின் வேலை பறிக்க பாஜக முயற்சி : திருமாவளவன்

சென்னை : தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்ததுபோல் முருகனின் வேலை பறிக்க பாஜக முயற்சிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க இருக்கின்றனர். முருகனின் அறுபடை வீடுகள் வழியாக நடத்தப்படும் இந்த வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தடைகோரி வருகின்றன.

Tags : BJP ,Murugan ,Thirumavalavan ,Tamils , Murugan, work, snatch, BJP, Thirumavalavan
× RELATED நீலகிரியில் வாழும் பழங்குடியின...