×

புதிய தொழில் தொடங்க, தொழில்களை விரிவாக்கம் செய்ய உரிமங்கள் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதை எளிமையாக்குவதற்கு தொழில் வணிகத்துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச்சாளர தகவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்து https://easybusiness tn.gov.in/msme என்ற இணையதள முகவரியில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தொழில் முனைவோர்கள் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறையினரிடம் இருந்து புதிய உரிமங்கள் மற்றும் புதுப்பித்தல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையினரிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ், நகர ஊரமைப்பு மனை திட்ட அலுவலகத்தில் இருந்து மனை அல்லது கட்டிட வரைபட அங்கீகாரம், மின் வாரியத்திடமிருந்து பெற வேண்டிய மின் இணைப்பு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையிடமிருந்து பெற வேண்டிய தடையில்லா சான்று மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் ஆகியவற்றுக்கான சேவைகளை குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பெறலாம்.    

இதனால் தொழில் முனைவோர்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லா சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவைகளை அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். எனவே, திருவள்ளுர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிமங்கள் பெற மற்றும் புதுப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களுடன் https://easybusiness tn.gov.in/msme என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் விரைவில் அனுமதி பெற்றுத்தர ஒற்றைச்சாளர முறை ஆய்வுக்கூட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது தொடர்பான விவரங்களை பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களுர் தபால் நிலையம் அருகில், திருவள்ளுர், 602 003 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27666787, 27663796 என்ற எண்கள் கொண்ட தொலைபேசிகள் வாயிலாகவோ அணுகுமாறு மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Tags : businesses , To start a new business, apply for a license to expand a business: Collector Information
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...