கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 3 வாலிபர்கள் கோர்ட்டில் சரண்

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (22). சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி இரவு, குன்றத்தூர் அருகே தர்காஸ் பகுதியில் இவரது உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு அபிஷேக் வீட்டுக்கு புறப்பட்டார். மண்டபத்தில் இருந்து சிறிது தூரம், பைக்கில் வந்த மர்மநபர்கள், திடீரென அபிஷேக்கை மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். புகாரின்படி சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து26 பேரிடம் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கல்லூரி மாணவன் அபிஷேக் கொலை வழக்கு தொடர்பாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சச்சின் (20), ராஜ்குமார் (19), பம்மல் மதன் (20) ஆகியோர் நேற்று முன்தினம் அம்பத்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை, 15 நாள் சிறை காவலலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார், 3 பேரையும் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், கோர்ட்டில் சரணடைந்த 3 பேரையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தால், அபிஷேக் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>