தீபாவளி போனஸ், ஊதிய உயர்வுகோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

சென்னை: தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கோரி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவர்களிடம், 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவையின் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில செயலர் இருளாண்டி கூறியதவது: ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சு நடத்த சென்னைக்கு அழைத்தும், எங்களிடம் பேசவில்லை.

அதற்கு பதிலாக குறைந்த  சதவீதத்தில் ஊதிய உயர்வு அளித்துள்ளனர். இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்தாண்டு, 30 சதவீதம் ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். நிர்வாகம் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories:

>