மின்வாரியத்தில் புது சாப்ட்வேர்

சென்னை: தமிழக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட துணைமின் நிலையங்கள் உள்ளன. தற்போது ஒருசில துணைமின்நிலையங்களில் சோதனை அடிப்படையில் புது சாப்ட்வேர் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் துணைமின்நிலையத்தில் பயன்படுத்தப்படும் மின்அளவை தானியங்கி முறையில் ரீடிங் எடுத்துக்கொள்ள முடியும். அப்போது தானாகவே குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை துள்ளியமாக அங்குள்ள கணினியில் விபரம் பதிவு செய்யப்பட்டு விடும். மேலும் தலைமை அலுவலகத்திற்கும் சம்மந்தப்பட்ட தகவல் உடனடியாக கிடைத்துவிடும்’ என்றார்.

Related Stories:

>