மநீம கட்சிக்கு 3வது அணிக்கான தகுதி வந்துவிட்டது: கமல்ஹாசன் நம்பிக்கை

சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் கடந்த 3 நாட்களாக நடந்தது. கடைசி நாள் கூட்டமான நேற்று கமல்ஹாசன் பேசியதாவது: 3வது அணிக்கான தகுதி உங்களுக்கு வந்துவிட்டதா என கேட்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அந்த தகுதி எப்போதோ வந்துவிட்டது. டெல்லியில் கடந்த 2013ல் ஒரு மாற்றம் நடந்தது. அதுபோன்ற மாற்றம்தான் தமிழகத்திலும் அடுத்த ஆண்டு தேர்தலில் நடைபெறும். மக்கள் நீதி மய்யம், கிராமங்களுக்கும் தேவையாக உள்ளது. அதை கிராம மக்களை நீங்கள்தான் உணர செய்ய வேண்டும்.

 நான் கோடி கோடியாக சம்பாதிக்கிறேன் என சொல்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை எங்கே செலவழிக்கிறேன் என்பதுதான் முக்கியம். எனக்கான வாழ்வாதாரம் எது, எதில் செலவிட வேண்டும் என எண்ணிப்பார்த்து அங்குதான் அந்த பணத்தை செலவிடுகிறேன். வருகிற சட்டசபை தேர்தலில் கடுமையாக உழைத்து கட்சியின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

Related Stories:

>