×

வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி காரில் கடத்தியபோது மற்றொரு கடத்தல் கும்பல் துரத்தியதில் கார் எரிந்து 5 பேர் பலி அம்பலம்: போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

திருமலை: ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டி காரில் கடத்தியபோது மற்றொரு கடத்தல் கும்பல் அவர்களை துரத்தியதில் கார் விபத்துக்குள்ளாகி எரிந்து 5 பேர் பலியானது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம், சேஷாசலம் மலைத்தொடரில் அரியவகை ்செம்மரங்கள் உள்ளது. இவற்றை தமிழகம் உட்பட பல்வேறு மாநில கடத்தல்காரர்கள் கடந்த 20 ஆண்டுகளாக கடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை கடத்தி வரக்கூடிய வாகனத்தை வழி மடக்கி கடத்தல்காரர்களை தாக்கி செம்மரங்களை கடத்தி செல்லும் கும்பலும் கடந்த சில ஆண்டுகளாக களமிறங்கி செயல்பட்டு வருகிறது.

இதில், பெங்களூருவை மையமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய பாஷா பாய் என்பவர் தலைமையிலான கும்பல்  தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து செம்மரம் கடத்தி வந்த கார் விபத்தில் சிக்கி எரிந்ததில், அதில் இருந்த  தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கருகி பலியாகினர். இது, முதலில் விபத்து என்று போலீசார் கருதினர். ஆனால், விசாரணையில்பாஷா பாய்  கும்பலை சேர்ந்தவர்கள், கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்தி வந்த தமிழகத்தை சேர்ந்த வாலிபர்கள் சென்ற காரை வழி மடக்கி நிறுத்தி எடுத்துச் செல்ல முயன்றபோது கடத்தல்காரர்களுக்கும் பாஷா பாய் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இருகும்பலும் அதிவேகமாக காரை ஓட்டி வந்துள்ளனர். இதில், செம்மரம் வெட்டி கடத்தி கொண்டு சென்ற தமிழகத்தை சேர்ந்த 5 கூலித்தொழிலாளர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து  வள்ளூர் அருகே சென்றபோது டிப்பர் லாரியில் மோதி டீசல் டேங்கரில் இடித்து விபத்தில் சிக்கியது.

இதில், 5 பேரும் செம்மரக்கட்டைகளுடன் உடல் கருகி உயிர் இழந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலத்தை சேர்ந்தவர் கள்: போலீசார் கூறுகையில்,  ‘செம்மரக்கட்டைகளுடன் வந்து விபத்தில் சிக்கிய 2 கார்களில் இருந்து சடலமாக  மீட்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டம் கருமந்துறையை சேர்ந்த ராஜீ (32),  கள்ளக்குறிச்சி  சின்னசேலம் தாலுகா கீழாத்துக்குழியை சேர்ந்த மகேந்திரன்  (25), ஈச்சங்காட்டை சேர்ந்த ராமச்சந்திரன் (25), முத்தய்யன், தேவனூரை  சேர்ந்த சந்திரன் ஆகிய 5 பேர் என தெரிய வந்தது. மேலும் கருமந்துறையை  சேர்ந்த மணி என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். சதிஷ் என்பவர் தப்பி  ஓடிவிட்டார். அவரது ஊர் விவரம் தெரியவில்லை’ என்றனர்.

Tags : kidnapping gang ,woods ,death ,police investigation , Cemmarankalai cut in forests in the car chase car burned katattiyapotu 5 kills another mafia scandal: Frightened information on police investigation
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...