பண்ருட்டியில் பரபரப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் நகை கொள்ளை?

பண்ருட்டி:  கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஸ்டேட் பேங்க் நகரில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் கால்நடைத்துறை அமைச்சரும், தற்போதைய அமைச்சர் எம்.சி. சம்பத்தின் அண்ணனுமான எம்.சி.தாமோதரனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தாமோதரன் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றுள்ளனர். இரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்று விட்டதாக கூறப்பட்டது.  தகவலின்பேரில், எஸ்பி அபிநவ், பண்ருட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், முன்னாள் அமைச்சர் தாமோதரன் குடும்பத்தினரை வரவைத்தனர்.  அப்போது, 5 அறைகளில் இருந்த 4 அலமாரிகளை மர்மநபர்கள் உடைத்தது தெரியவந்தது. நகை, பணம் எதுவும் தனது வீட்டில் இருந்து கொள்ளை போகவில்லை என தாமோதரன் தெரிவித்துள்ளார். எனினும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>