×

துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியான சம்பவம்: வியன்னா தாக்குதலுக்கு ‘ஐஎஸ்’ பொறுப்பேற்பு: தீவிரவாதியின் புகைப்படம் வெளியீடு

வியன்னா: வியன்னாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியான தாக்குதல் சம்பவத்திற்கு ‘ஐஎஸ்’ தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவின் தேவாலயப் பகுதியில் 6 இடங்களில் கண்மூடித்தனமாக மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் உட்பட 6 பேர் பலியாகினர். பொதுமக்களில் 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு உலகின் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் (இஸ்லாமிய அரசு) என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஐ.எஸ் அமைப்பின் அமக் செய்தி நிறுவனம் மூலம் ஒரு அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது’ என்று, அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளமான டெலிகிராமில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில், தீவிரவாதி அபு தக்னா அல்-அல்பானி என்பவன் தாக்குதல் நடத்தியதாக காட்டப்பட்டுள்ளது. மத்திய வியன்னாவில் திங்களன்று இந்த தீவிரவாதிதான் தாக்குதல் நடத்தி உள்ளான். அந்த புகைப்படத்தில் உள்ள தீவிரவாதி அல்பானி, தனது ஒரு கையில் கைத்துப்பாக்கி, மற்றொரு கையில் இயந்திர துப்பாக்கியுடன் கத்தியும் வைத்துள்ளான்.

அவனது கையில் ஒரு கடிகாரம் மற்றும் மோதிரம் இருந்தது. இந்த மோதிரத்தில், ‘முகமது அல்லாஹ்வின் தூதர்’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆஸ்திரியா உள்துறை அமைச்சர் கார்ல் நெஹமரின் கூறுகையில், ‘தாக்குதல் நடத்தியவன் பெயர் ஹம்வார் குஜாதி ஃபெஜுலாய். 2019 ஏப்ரலில் 22 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவன், கடந்த டிசம்பரில் விடுவிக்கப்பட்டான். அதன்பின் சிரியாவுக்குச் சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளான்’ என்றார்.

Tags : shooting ,attack ,Vienna , 6 killed in shooting: 'IS' responsible for Vienna attack: Terrorist photo released
× RELATED பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி...