×

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக...!! புள்ளி பட்டியலில் இது போல நடந்தது இல்லை

அபுதாபி: ஐபிஎல் 2020 தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத மூன்று அணிகள் 12 புள்ளிகளை பெற்று முடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் முதல் 4 இடத்தை பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதல் நான்கு இடத்தில் மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் இருக்கிறது. இதில் மும்பை 18 புள்ளிகளும், டெல்லி16 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இதற்கடுத்து பெங்களூரும், ஹைதராபாதும் தலா 14 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது.

கடைசி நான்கு அணிகளில் கொல்கத்தா 14 புள்ளிகளுடனும், பஞ்சாப், சென்னை, ராஜஸ்தான் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்துள்ளது. இந்த மூன்று அணிகளுமே குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் 4 இடங்களை பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டுள்ளது. ஓரிரு போட்டிகளில் வெற்றி தோல்விகள் மாறியிருந்திருந்தாலும் இந்த பிளே ஆஃப் பட்டியலில் மாற்றம் இருந்திருக்கும். ஐபிஎல் வரலாற்றிலேயே இதுபோல அனைத்து அணிகளும் 12 புள்ளிகளுக்கு மேல் எடுத்தது இல்லை. ஏதேனும் ஒரிரு அணிகள் படுமோசமான தோல்விகளை சந்திக்கும்.

Tags : IPL , For the first time in the history of the IPL ... !! The point list never happened like this
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி