×

டெல்லியில் கொரோனா பரவலின் 3-வது அலை..!! பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,254 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணைக்கை 83,13,877 ஆக உயர்ந்துள்ளன. கொரோனாவில் இருந்து மொத்தம் 76,56,478 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர், இதில் நேற்று மட்டும் 53,357 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், டெல்லியில் கடந்த சில நாட்களாக தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா பாதிப்பு எட்டி வருகிறது.

குறிப்பாக நேற்று டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக நேற்று 6 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோருக்கு  தொற்று பாதிப்பு பதிவானது. இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; டெல்லியில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் மூன்றாவது அலை என இதை நாம் அழைக்கலாம் என நினைக்கிறேன். தொற்று பரவும் விகிதத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

Tags : corona spread ,Delhi ,Arvind Kejriwal ,public , 3rd wave of corona spread in Delhi .. !! The public need not fear: Chief Minister Arvind Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...