நடப்பாண்டு தொடரில் IPLCup இவர்களுக்குதானா?... ரசிகர்களை மிரள வைத்த ட்வீட் பதிவு

இந்த முறை ஐபிஎல் போட்டியில் என்ன நடக்க போகிறது என்பதை ஒருவர் ஜூலை மாதமே கூறியுள்ளார். Mitul என்ற நபர் ஜூலை 27-ம் தேதி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்; இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்பதை குறிப்பிட்டுள்ளார். இதேபோல பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் எனவும் கூறினார். விராட் கோலி ஓரளவு தான் விளையாடுவார். பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என அனைத்தையயும் அப்படியே கணித்துள்ளார்.

எல்லாருக்கும் மேலாக ஐதராபாத் அணிதான் கோப்பையை வெல்லும் என்பதையும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வேகமாக பரவ தொடங்கியதும் அவரது டிவிட்டர் கணக்கை பின்தொடர்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதுமட்டுமின்றி 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியே இந்த ஆண்டு வேண்டாம் 2021 வர வேண்டும் என விரும்புவதாகவும், அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>