துபாயில் நவ.27 முதல் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டி: தமிழக மாற்றுத் திறனாளி வீரர்கள் பங்கேற்க முடியாமல் தவிப்பு

மதுரை: துபாயில் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளி கிரிக்கெட் தொடரில் நிதி பற்றாக்குறை காரணமாக கலந்துகொள்ள வழியின்றி தமிழக வீரர்கள் தவித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக வரும் 27-ம் தேதி முதல் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை துபாயில் நடக்க உள்ள டிபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை, மும்பை டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் என 5 அணிகள் விளையாட உள்ளன. சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரர்களுக்கு பயிற்சிக்கும் பேட் உள்ளிட்ட உபகாரங்கள் வாங்கவும் மாவட்ட நிர்வாகங்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.

ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகம் நிதி இல்லை என்றதோடு, தொண்டு நிறுவனங்களை அணுகுமாறு கூறியதால் கேப்டன் சச்சின் சிவா உள்ளிட்ட 4 பேர் போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 4 பேரின் பயண செலவுக்கு 1 லட்சம் ரூபாய் கூட இல்லாமல் தவிப்பதாக கூறிய வீரர்கள், வழக்கமான கிரிக்கெட் போல தங்களது போட்டிக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Related Stories:

>