×

வெற்றியை தட்டிப்பறிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக டொனால்ட் ட்ரம்ப் டிவீட் : தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ட்விட்டர் நிறுவனம் கண்டனம்!!

வாஷிங்டன் : அமெரிக்கத் தேர்தல் முடிவு என்னவாக இருக்கும் என உலகமே ஆவலோடு காத்திருக்கிறது.  அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் களம் காணுகிறார். தற்போது அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், ஜோ பிடன் 223 இடங்களிலும், டிரம்ப் 212 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவைப்படும் நிலையில், யார் வெற்றி பெறுவார் எனும் பரபரப்பில் அமெரிக்கா உள்ளது.

இந்நிலையில் ’இன்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிடுவேன். மிகப்ப் பெரிய வெற்றி பெறுவோம்’ என்றும், ‘எங்கள் வெற்றியைத் திருடப் பார்க்கிறார்கள். தேர்தல் முடிந்தும் ஓட்டு போடுகிறார்கள்’ என்றும் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜோ பைடன், “நாங்கள் வெற்றி பாதையில் இருக்கிறோம். இது நானோ ட்ரம்போ வெற்றி பெற்றதை அறிவிப்பதல்ல. வாக்காளர்களின் முடிவைச் சொல்வது. இறுதி முடிவு வரும் வரை அமைதியாக இருங்கள்’ என்று ட்விட் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வெற்றியை தட்டிப்பறிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு டுவிட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை டிரம்ப் மீறி விட்டதாகவும் அமெரிக்க தேர்தல் முடிவுகளில் குழப்பதை ஏற்படுத்த டிரம்ப் முயற்சி செய்வதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Donald Trump ,opposition parties , Donald Trump, Tweet, Election, Twitter, Company, Condemnation
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு