×

7 மாதத்துக்கு பிறகு பத்மநாபபுரம் அரண்மனை திறப்பு

தக்கலை: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனை 7 மாதத்திற்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கோவிட் பரவல் காரணமாக கடந்த மார்ச் 13 முதல் பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மார்ச் 22 முதல் ஊரடங்கு அமலானதால் தொடர்ந்து அரண்மனை பூட்டப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகையை நம்பி வைத்திருந்த கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

அரண்மனை கேரள அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. அரண்மனையில் சுற்றுலா பயணிகள் அனுமதிப்பது குறித்து கேரள அரசு ஆலோசனை நடத்தியது. கேரளாவில் சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அரண்மனையினை திறக்கவும், சமூக இடைவெளியுடன் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவும் முடிவு செய்தது.

இதையடுத்து நேற்று அரண்மனை திறக்கப்பட்டது. ஊழியர்கள் அனைவரும் மாஸ்க், பேஸ் ஷீல்ட், கையுறை அணிந்து பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் தெர்மல் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அரண்மனை திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளும் வர தொடங்கினர். வியாபாரிகளும் கடைகளை திறந்து வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

Tags : Padmanabhapuram Palace , Padmanabhapuram Palace
× RELATED 3 சுவாமி விக்ரகங்கள்...