×

மயிலாடுதுறை அருகே சனி பகவான் கற்சிலை கண்டெடுப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விளநகர் வேயுறு தோளியம்மை உடனாகிய துறைகாட்டும் வள்ளலார் கோயிலில் இன்று (4ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நடைபெற்ற யாகசாலையில் தானியம் வைக்கும் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27வது சந்நிதானம் பங்கேற்று வழிபாடு நடத்தினார். அப்போது, கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடி அருகில் தென்னங்கன்று நடுவதற்காக கோயில் நிர்வாகத்தினர் குழி தோண்டியபோது அதில் 1 அடி உயரமுள்ள சனி பகவான் கற்சிலை ஒன்று மண்ணிற்கு அடியில் தென்பட்டது.

இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர், அதனை வெளியில் எடுத்து தருமபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து பார்த்த ஆதீனம், சனிபகவானுக்கு வன்னி மரம் தல விருட்சமாக விளங்குவதாகவும், இந்த சனிபகவான் திருமேனி வன்னி மரத்தடியிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அச்சிலையை வன்னி மரத்தடியிலேயே மேடை அமைத்து பிரதிஷ்டை செய்தார். இதுதொடர்பாக தரங்கம்பாடி தாசில்தார் கோமதியிடம் கேட்டதற்கு, வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரிக்க இருப்பதாக தெரிவித்தார்.

Tags : Lord ,Saturn ,Mayiladuthurai , Mayiladuthurai, Lord Saturn
× RELATED வளமான வாழ்வருளும் வராஹர்