தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசன் மயிலாப்பூரில் போட்டியிட உள்ளதாக தகவல்

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூரில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஒரு தனியார் நிறுவனம் சர்வே நடத்தி உள்ளது. அந்த சர்வேயில் சென்னையில் அக்கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகத் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. எனவே அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளிவரவில்லை.

Related Stories:

>