×

அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை.. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் பின்னடைவு

வாஷிங்டன்: உலகின் சக்திவாய்ந்த பதவியான அமெரிக்க  அதிபர் பதவிக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்பதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது. அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. முன்கூட்டியே 10 கோடி பேர் வாக்களித்த  நிலையில், தேர்தல் நாளில் மேலும் 6 கோடி பேர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். வாக்குப்பதிவு முடிந்த மாகாணங்களில் உடனடியாக  வாக்கு எண்ணிக்கை தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதனால், அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப்பா, பிடெனா என்பது பற்றி எந்த  நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 119 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 91 இடங்கள் பெற்றுள்ளார்.அமெரிக்காவின் மசாசூட்ஸ், நியூ ஜெர்சி, மேரிலாண்ட் மற்றும் வெர்மாண்ட் ஆகிய மாகாணங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.இதேபோல், ஓக்லஹாமா, கெண்டகி மற்றும் இண்டியானா ஆகிய மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

*நியூயார்க் மாகாணத்தில் மிக மிக மோசமான தோல்வியைத் தழுவினார் டொனால்ட் டிரம்ப். நியூயார்க்கில் 76%வாக்குகளைப் பெற்றார் ஜோ பிடன்; டொனால்ட் டிரம்ப்-க்கு வெறும் 23% வாக்குகளே கிடைத்தன. நியூயார்க்கில் ஜோ பிடன் பெற்ற வாக்குகள்: 10,06,362; டிரம்ப்- பெற்ற வாக்குகள் 3,11,122.


Tags : election ,US ,Joe Biden ,Trump ,Democratic ,Republican , US presidential election, Democrat, candidate, Joe Biden, Republican, Trump, backlash
× RELATED அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை...