3 ரபேல் விமானங்கள் இன்று வருகை

புதுடெல்லி: பிரான்சில் இருந்து மொத்தம் 36 ரபேல் போர் விமானங்களை ரூ.56,000 கோடி செலவில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக 5 போர் விமானங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது 2வது கட்டமாக பிரான்சில்  இருந்து இன்று மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளன. அவை எங்கும் இடை நிறுத்தாமல் நேராக அரியானா மாநிலம் அம்பாலாவில்  உள்ள விமானப்படை தளத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்த விமானங்களுக்கு நடுவானிலேயே எரிபொருள்  நிரப்பப்படும்.

Related Stories:

>