×

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: 5 பேர் பலி 17 பேர் காயம்

வியன்னா: ஆஸ்திரியா நாட்டில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து 6 இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில், 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். தீவிரவாதி ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் 6 இடங்களில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நவீன துப்பாக்கிகள் மூலம் அவர்கள் சுட்டனர். அந்நாட்டில் கொரோனா பரவுதல் அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பெண்கள், 3 ஆண்கள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவன் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர் எனவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கார்ல் நெகம்மர் தெரிவித்துள்ளார். தப்பி சென்ற மற்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் காவல்துறையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வியன்னாவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர்  டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜன்சான், இத்தாலி பிரதமர் கியூசெப் கியூசெப் கோண்டே உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘வியன்னதாவில் நடத்தப்பட்ட பயங்கரமான தீவிரவாத தாக்குதல் சம்பவத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களோடு இருக்கும்,’ என கூறியுள்ளார்.

Tags : Terrorist attack ,Vienna ,places ,Austrian , Terrorist attack in 6 places in the Austrian capital Vienna: 5 killed, 17 injured
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி