கொரோனா மற்றும் ஆன்லைன் பட்டா, காப்பீடு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு மற்றும் ஆன்லைன் பட்டா வழங்கும் திட்டம், காப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 9ம் கட்ட ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக கடந்த அக்டோபர் 28ம் தேதி முதல்வர் பழனிசாமி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். அதில், கொரோனா தடுப்பு, ஆக்கிரமிப்புகள் வரன்முறைப்படுத்துதல், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு காப்பீடு திட்டம், கிராமப்புறம் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வீடு கட்டும் திட்டம், ஆன்லைன் பட்டா வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதற்கான, விவரங்களை சேகரித்து கூட்டத்தில் பங்கேற்கும்படி சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>