ஐபிஎல் டி20 2020: மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது

சார்ஜா: ஐதராபாத் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. சார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 17.1 ஓவரில் விக்கெட்கள் இழப்பின்றி 151 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories:

>