பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு நாளை 3 ரபேல் விமானம் வருகை

புதுடெல்லி: பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் நாளை இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா பிரான்சிலிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து இருந்தது. இதில்,  ஐந்து போர் விமானங்கள் ஏற்கனவே அம்பாலா விமான தளத்தில் தரையிறங்கியுள்ளன. நாளை (நவ. 4) மூன்று ரபேல் போர் விமானங்கள் பிரான்சின் இஸ்ட்ரெஸிலிருந்து இந்தியாவின் ஜாம்நகருக்கு வருகிறது. இந்த போர் விமானங்கள் சுமார்  8 மணி நேரம் இடைவிடாது வானில் பறக்கும். பிரான்ஸ் விமானப்படை விமானம் மூலம் எரிபொருள் நிரப்பப்படும்.

ஏற்கனவே, ஜூலை மாதம் இந்தியா வந்த விமானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் சில மணி நேரம் இருந்துவிட்டு இந்தியா வந்தடைந்தன. ஆனால், இந்த முறை நாளை இந்தியா வரும் மூன்று ரபேல்  போர் விமானங்களும் பிரான்சிலிருந்து எங்கும் நிற்காமல் இந்தியா வந்து சேரவுள்ளது. அடுத்தாண்டு இறுதிக்குள் பிரான்சில் இருந்து 36 போர் விமானங்கள் இந்தியா வந்தடையும் என்று வெளியுறவு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>