மத்திய அமலாக்கத்துறை எல்லை மீறி செயல்படுகிறது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கூட்டாட்சி தத்துவத்தை மீறி மத்திய விசாரணை அமைப்புகள் கேரள அரசின் புகழை கெடுக்கும் விதத்தில் செயல்படுகின்றன என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று  திருவனந்தபுரத்தில் அளித்த ேபட்டி: திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள அரசு தான் மத்திய அரசிடம் கேட்டது. அதன்படி மத்திய விசாரணை குழுக்கள் விசாரணை நடத்தின. முதலில்  விசாரணை முறையாக நடந்தது. ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. லைப் மிஷன், கே-போன் உட்பட திட்டங்களில் தேவையில்லாமல் தலையிடுகின்றனர்.

மத்திய அமலாக்கத்துறை எல்ைல மீறி செயல்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி திட்டங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தத்தான்  மத்திய விசாரணை குழுக்கள் செயல்படுகின்றனவோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணை என்பது மிகவும் ரகசியமாக நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் விசாரணை தகவல்களை வௌிப்படுத்துவதை வைத்து பார்க்கும்போது  வேண்டுமென்றே கசிய விடுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலை தொடர்ந்தால் பொறுமையாக இருக்கமாட்டோம். அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

கே-போன் என்பது சாதாரண அடித்தட்டு மக்களுக்கு சலுகை கட்டணத்தில் இன்டர்நெட் வழங்கும் திட்டமாகும். இதை சீர்குலைக்கும் ேநாக்கத்தில் செயல்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் கே-போன் திட்டத்தை செயல்படுத்தியே  தீருவோம். நியாயமாக விசாரணை நடத்துவதில் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>