ஊரப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் 3வது முறையாக கொள்ளை

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதை பயன்படுத்திய மர்ம நபர்கள் நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே பள்ளியில் ஏற்கனவே 2 முறை பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக நடந்துள்ள இக்கொள்ளைச்  சம்பவம் ஊரப்பாக்கம் பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: