ஏழை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இந்த ஏழை மகன் ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்து வருகிறேன்: பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உருக்கம்

ஆராரியா: ஏழை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்றத்துக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுகளில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வரும் 7ம் தேதி நடக்கவுள்ள 3ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று மேற்கொண்டனர். அரேரியா மாவட்டத்தில் உள்ள போர்பெஸ்கஞ்ச் மற்றும் சஹர்சா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்; மோடியின் தொடர் தேர்தல் வெற்றிகள் எதிரிகளுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது என குறிப்பிட்டார். தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கவலைகள், பிரச்சனைகளை களையும் வேலைகளை தாம் தொடர்ந்து செய்து வருவதால், தாய்மார்கள் அனைவரும் தங்களது ஆசியை வழங்கி வருவதாக தெரிவித்தார். ஏழை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இந்த ஏழை மகன் ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாகவுன், பிரதமர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>